Coffee with NEET Day 2 [ Characteristic Features of Viruses | வைரஸ்களின் பண்புகள் ]




வைரஸ்கள் (Viruses) 1

  • Which are considered as “Biological Puzzle” 

உயிரியியலின் புதிர் என்று அழைக்கக்கூடியதுமான வைரஸ்களாகும். 

  • Viruses which connect the living and nonliving world 

உயிரி உலகத்தையும், உயிரற்ற உலகத்தையும் இணைக்கக்கூடியது வைரஸ்கள். 

  • The word virus is derived from Latin meaning ‘Poison’ 

இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட 'வைரஸ்' என்ற சொல்லுக்கு 'நச்சு' என்று பொருள். 

  • Viruses are submicroscopic, obligate intracellular parasites 

வைரஸ்கள் மீநுண்ணிய, செல்லுக்குள்ளே வாழும் நிலைமாறா ஒட்டுண்ணிகள் ஆகும். 

  • They have nucleic acid core surrounded by protein coat 

இவை புரத உறையால் சூழப்பட்ட உட்கரு அமிலத்தைப் பெற்றுள்ளன. 

  • Viruses in their native state contain only a single type of nucleic acid which may be either DNA or RNA 

 இயற்கையான அமைப்பில் DNA அல்லது RNA உட்கரு அமிலத்தை இவைகள் பெற்றுள்ளன. 

  • The study of viruses is called Virology. 

வைரஸ்களைப் பற்றிய படிப்பின் பிரிவு 'வைரஸ் இயல்' (Virology) என்று  அழைக்கப்படுகிறது.

Milestones in Virology | வைரஸ் இயலின் மைல்கற்கள் 

  • 1935 W.M. Stanley obtained virus in crystallised form from infected tobacco juice.

1935  W.M. ஸ்டான்லி நோயுற்ற புகையிலைச் சாற்றிலிருந்து வைரஸ்களைப் படிகப்படுத்தினார். 

  • 1946 W.M. Stanley was jointly awarded “Nobel Prize” with Dr. J.H. Northrop for Chemistry

1946 W.M. ஸ்டான்லி வேதியியல் பிரிவிற்கான நோபல் பரிசை Dr. J.H. நார்த்ட்ராப்புடன் சேர்ந்து பெற்றார்.

  • 1796 Edward Jenner used vaccination for small pox

1796 எட்வர்ட் ஜென்னர் பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்தார்.

  • 1886 Adolf Mayer demonstrated the infectious nature of Tobacco mosaic virus using sap of mosaic leaves

1886 அடால்ப் மேயர் புகையிலை தேமல் நோய் வைரஸின் தொற்றுத்தன்மையை, தேமல் பாதித்த இலைச்சாற்றைப் பயன்படுத்தி விளக்கினார்.

  • 1892 Dimitry Ivanowsky proved that viruses are smaller than bacteria

1892 டிமிட்ரி ஐவான்ஸ்கி வைரஸ்கள் பாக்டீரியங்களை விடச்சிறியது என நிரூபித்தார்.

  • 1898 M.W. Beijierink defined the infectious agent in tobacco leaves as῾Contagium vivum fluidum’

1898 M.W. பெய்ஜிரிங்க் புகையிலையில் உள்ள தொற்றுதல் காரணியை "தொற்றுத் தன்மை வாய்ந்த உயிருள்ள திரவம்" என்று அழைத்தார். 

  • 1915 F.W.Twort identified Viral infection in Bacteria

1915 F.W. ட்வார்ட் - பாக்டீரியங்களில் வைரஸ் தொற்றுதலை கண்டறிந்தார். 

  • 1917 d’Herelle coined the term ‘Bacteriophage’

1917 டி' ஹெரில்லி - "பாக்டீரியஃபாஜ்" எனும் சொல்லைப் பயன்படுத்தினார். 

  • 1984 Luc Montagnier and Robert Gallo discovered HIV (Human Immuno Deficiency Virus)

1984 லுக்மான்டக்னர்மற்றும் இராபர்ட்கேலோ - HIV-யை (மனித நோய் எதிர்ப்புசக்தி குறைக்கும் வைரஸ்) கண்டுபிடித்தனர். 

  • 1971 David Baltimore given Classification of Viruses

1971 டேவிட் பால்டிமோர் வைரஸ்களுக்கான வகைப்பாட்டை  வெளியிட்டார்  

  • 1971 T.O.Diener discovered Viroid

1971  T.O. டெய்னர், விராய்டுகளை கண்டுபிடித்தார்

  • 1981 J.W.Randles and Co-workers discovered Virusoids

1981 J.W. ராண்டல்ஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்களும் விருசாய்டுகளை கண்டறிந்தனர். 

  • 1982 Stanley B. Prusiner discovered Prions

1982 ஸ்டான்லி B. புரூச்னர் பிரியான்களை கண்டுபிடித்தார்.

  • 1963 Safferman and Morris first reported Viruses infecting blue green algae are called Cyanophages

1963 சாபர்மேன் மற்றும் மோரிஸ் ஆகியோர் நீலப்பசும் பாசிகளைத் தாக்கக்கூடிய வைரஸ்களை முதன் முதலாகக் கண்டறிந்து அவைகளைச் சயனோஃபாஜ்கள் என்று அழைத்தனர். (எடுத்துக்காட்டு: LPPI - லிங்ஃபயா, பிளக்டோனிமா மற்றும் ஃபார்மிடியம்)

  • 1962 - Hollings reported viruses infecting cultivated Mushrooms and causing die back disease. The viruses attacking fungi are called Mycoviruses or Mycophages

1962-ல் ஹோலிங்ஸ் என்பவர் வளர்ப்புக் காளான்களில் நுனிஅடிஇறப்பு நோய் (die back disease) பூஞ்சைகளைத் தாக்கக்கூடிய வைரஸ்கள் மைக்கோவைரஸ்கள் அல்லது மைக்கோஃபாஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன


Size | அளவு

  • They are smaller than bacteria

இவை பாக்டீரியங்களை விடச் சிறியவை. 

  • Their diameter range from 20 to 300 nm

பொதுவாக 20nm முதல் 300nm வரை விட்டமுடையவை. 

  • (1nm = 10-9metres)

(Inm 1நானோமீட்டர்) = 10-9 மீட்டர்). 

  • Bacteriophage measures about 10-100 nm in size

பாக்டீரியஃபாஜ்கள் 10nm முதல் 100nm வரை அளவுடையவை. 

  • The size of TMV is 300×20 nm

TMV வைரஸின் அளவு 300 X 20 m ஆகும்.


வடிவம் 

i. Cuboid symmetry – Example : Adenovirus, Herpes virus.

கனசதுர வடிவம் எடுத்துக்காட்டு: அடினோ வைரஸ், ஹெர்ப்பஸ் வைரஸ்

ii. Helical symmetry – Example: Influenza virus, TMV.

சுருள் வடிவம் எடுத்துக்காட்டு: இன்புளுயன்சா வைரஸ், TMV 

iii. Complex or Atypical – Example: Bacteriophage, Vaccinia virus

சிக்கலான அல்லது இயல்பற்ற வடிவம் எடுத்துக்காட்டு: பாக்டீரியஃபாஜ், வாக்ஸினியா வைரஸ்


Characteristic Features of Viruses | வைரஸ்களின் பண்புகள்

Living Characters | உயிருள்ள பண்புகள் 

  • Presence of nucleic acid and protein | உட்கரு அமிலம், புரதம் கொண்டிருத்தல். 

  • Capable of mutation | திடீர்மாற்றம் அடையும் திறன்.

  • Ability to multiply within living cells | உயிருள்ள செல்லுக்குள் மட்டுமே பெருக்கமடையும் திறன். 

  • Able to infect and cause diseases in living Beings | உயிரினங்களில் நோயை உண்டாக்கும் திறன். 

  • Show irritability | உறுத்துணர்வு உள்ளவை. 

  • Host –specific | குறிப்பிட்ட ஓம்புயிர்ச்சார்பு கொண்டவை.

Non-living Characters | உயிரற்ற பண்புகள் 

  • Can be crystallized | படிகங்களாக்க முடியும். 

  • Absence of metabolism | வளர்சிதை மாற்றம் காணப்படுவதில்லை.

  • Inactive outside the host | ஓம்புயிரிக்கு வெளியே செயல்படும் திறனற்றவை

  • Do not show functional autonomy | தன்னிச்சையான செயல்பாடுகள் எதுவும் காணப்படுவதில்லை. 

  • Energy producing enzyme system is absent | ஆற்றலை வெளிப்படுத்தும் நொதிகளின் தொகுப்பு காணப்படுவதில்லை.



NEET Botany 2021 
Telegram Channel 

பயிற்சி தேர்வு லிங்க்  (Practice Link)
பயிற்சி பெற்றபின் சான்றிதழ் தேர்வு எழுதவும் .
(பல முறை பயிற்சி தேர்வு எழுதலாம்) 
Tamil
English



 சான்றிதழ் தேர்வு லிங்க் (Certificate Test) 
ஒரு முறை மட்டும் சான்றிதழ் தேர்வு எழுத முடியும் 
சான்றிதழ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் 

Tamil Medium

English Medium
NEET Botany 2021
 Telegram Channel 


மேலும் விவரங்களுக்கு 


மோசஸ் பாக்கியராஜ். A, M.Sc., M.Ed.,
முதுகலை தாவரவியல் ஆசிரியர் 
CSI பெண்கள் மேல்நிலைப்  பள்ளி, மதுரை 
9994720207


Post a Comment

Previous Post Next Post